Mining என்பது என்ன? Mining செய்வது ஆபத்தா? உள்ளே….

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

What is Mining :

Mining என்பது சாதாரண ஒரு செயல் இல்லை. இந்த mining பற்றி நன்கு தெரிந்த பின்னரே mining ஐ முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு Profit அதாவது அதன் மூலம் லாபம் கிடைக்கும் மட்டும் என நினைக்காதீர்கள். இதிலிருந்து நஷ்டமும் ஏற்படும். அதற்கு ஏற்ப உங்களை தயாராக வைத்து கொள்வது அவசியம். Mining என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதற்கேற்ப Risk ஐ நீங்கள் எடுக்க வேண்டும்.

Risk in Mining :

உதாரணமாக ஒருவர் 12 Graphic card களை வைத்து ஒரு RIG ஆனதை செய்கிறார். அந்த 12 Graphic card கு 5 லட்சம் செலவாகும் என வைத்து கொள்ளுங்கள். இந்த 5 லட்சத்தை நீங்கள் loan வாங்கியோ அல்லது மற்றவைகளிடம் பணத்தை கேட்டோ வாங்குவீர்களாக இருந்தால் தயவுசெய்து இதனை தவிர்ப்பது நல்லது. அதுவும் இந்த நிலையில் Silicon Shortage உள்ள நிலையில் கிராபிக் கார்டு இரண்டு மடங்கு விலைகள் உள்ளன இதனால் உங்களுக்கு செலவானது அதிகமாகும். மற்றும் மார்க்கெட் களின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து இதில் கிடைக்கும் profit ஆனது மாறுபடும். இந்த mining ஐ நீங்கள் முழுவேளை வேலை ஆகா வைத்திருக்காதீர்கள்.

RIG Mining :

நீங்கள் ரிக் இல் வைக்கும் ஒவ்வொரு கிராபிக் கார்டும் ஒரு mining tool ஆகும். Mining என்பது ஒரு சுரங்கத்தை தோண்டி அதிலிருந்து எடுக்கும் வைர கற்கள் போல. அதே நோக்கம் தான் இந்த ரிக் Mining உம். ஒவ்வொரு GPU கும் ஒவ்வொரு ஹாஷிங் பவர் ஆனது இருக்கும். ஹாஷிங் பவர் என்பது ஒரு GPU ஆல் எந்த அளவுக்கு Mining capacity செய்ய முடியுமோ அது ஹாஷிங் பவர் ஆகும். உத்தரமாக GTX 1660 Super ( RS 27,000 ) ன் Mining Capacity பார்த்தால் 30Hz. உங்களின் GPU விலை ஆனது கூட கூட ஹாஷிங் பவர் ஆனது கூடும். குறிப்பாக rtx 3060 ஐ ஓவர் கிளாக் செய்தால் அதனால் 125Mhz வரை Hashing Power கொடுக்க முடியும். குறைந்தபட்சம் 6 gb கு மேல் உள்ள gpu இல் mine செய்தால் லாபம் ஆனது பெறலாம்.

Mining :

உதாரணமாக ஒரு பெட்டி ஆனது பூட்ட பட்டுள்ளது என வைத்துகொள்ளுங்கள். அதில் சில விஷயங்களை பயன்படுத்தி அதனை திறப்பது ஆகும். இதைத்தான் GPU ஆனது செய்கிறது. GPU ஆனது கம்ப்யூட்டர் மூலமாக சேர்ந்து ஒரு அல்கேரிதம் மூலம் அந்த எதெரியும் ஐ எடுத்து அதை டிஜிட்டல் currency ஆகா மாற்றுகிறது.இதிலும் ஒரு ப்ளாக்கில் அதிகமானோர் Mine செய்வார்கள். ஒரு Pool இல் 1000 கு மேற்பட்டோர் mine செய்து அதனை திறந்தால் அதில் 3 எதெரியம் கிடைக்கும். இதில் உள்ள லாபம் அதாவது அதிக தொகை ஆனது யாருக்கு செல்லும் என பார்த்தால் அந்த 1000 பேர் கொண்ட mining இல் யாருடைய GPU ஆனது அதிக ஹாஷிங் பவர் கொண்டுள்ளதோ யாரால் அதனை அதிக சக்தி வைத்து திறக்க முடிந்ததோ அவருக்கு ஆதில் லாபத்தின் பங்கு ஆனது அதிகமாக கிடைக்கும். இதனை Exchange மூலமாக Cash ஆகா மாற்றி எடுத்து கொள்ளலாம். Cripto Currency சேவையை யாராலும் Hack செய்ய முடியாது. அந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த server எல்லாம் ஒரு company organaizied ஆகா இருக்கும். கிரிப்டோவில் உள்ள பணத்திற்கு வரி ஆனது கிடையாது. மற்றம் நீங்கள் செய்யும் பண பரிவர்த்தனை அனைத்து மற்றவர்களுக்கு தெரியாது. Cripto Currency ஐ manipulate செய்வது illegal ஆனா செயல். குறிப்பாக 2008 இல் Bitcoin ஆனது manipulate செய்ய பட்டதால் அதில் புதிதாக சேர்ந்த அனைவரும் மிக பெரிய வீழ்ச்சியை அடைந்தனர். இதனால் இவர்கள் அனைவரும் அவர்களின் GPU களை விற்றனர்.

மேலும் வாசிக்க:  Bitcoin என்றால் என்ன? எப்படி சம்பாதிப்பது? விளக்கம்!

BitCoin :

ஆனால் இப்பொழுது உலகமே அறியும் ஒரு மனிதர் Elun Musk அவர்கள் ஒரு tweet ஆனது twitter இல் போட்டிருந்தார். அதில் தான் BitCoin வாங்கியதாக போட்டிருந்தார். இதனால் அதிகமானோர் அதில் Invest செய்தனர் என்பது குறிப்பிட தக்கது. இதன் மூலம் Elun Musk இன் நிறுவனம் ஆன TESLA வில் நீங்கள் BitCoin பயன்படுத்தி கார்களை வாங்கலாம் என அறிவித்தார். இதற்கு முன்பு ஒரு bitcoin இன் மதிப்பு ஆனது 40,000USD ஆகா இருந்தது. பின்பு Elon Musk இதில் இன்வெஸ்ட் செய்த பின்னர் அதன் மதிப்பானது 70,000USD ஆகா மாறியது. இது ஒரு மிக பெரிய முன்னேற்றம் ஆகா பார்க்க பட்டது. ஆனால் இப்பொழுது சில நாடுகளில் குறிப்பாக சீனா வில் மற்றும் அமெரிக்காவில் bitcoin ஆனது தடைசெய்ய போவதாக அறிவிக்கபட்டது. இதன் காரணமாக bitcoin மதிப்பு ஆனது மீண்டும் குறைய தொடங்கியது. இப்பொழுது இது கூடவும் இல்லாமல் குறைவும் இல்லாமல் ஒரு நடுநிலையாக உள்ளது.

முடிவு :

சிலிக்கான் shortage இல் GPU விலையானது அதிகரித்த நிலையில் உங்களிடம் அதிக பணம் மற்றும் Mining ல் திறமை இருந்தால் நீங்கள் இதனை செய்யலாம். BitCoin மற்றும் CriptoCurrency ஆகியவை எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்காது. ஒரு பெரிய பணக்காரரோ அல்லது ஒரு நாட்டின் அரசோ கொடுக்கும் செய்தியின் மூலம் bitcoin போன்றவற்றின் நிலை ஆனது கூடலாம் குறையலாம். அது எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் மனம் உள்ளவரே இதனை முயற்சி செய்வது நல்லது.

Leave a Reply