Photoshop என்றால் என்ன 

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் Photoshop ஐ பயன்படுத்தி எப்படி டிஜிட்டல் பெயின்டிங் செய்யலாம் என்பது பற்றி பார்க்க போகிறோம். அதற்க்கு முன்பாக photoshop என்றால் என்ன மற்றும் அது எப்படி வேலை செய்கிறது என பார்ப்போம்.  Photoshop என்பது நம்முடைய போட்டோக்கள் மற்றும் பலவிதமான டிசைன்களை வடிவமைக்க பயன்படுகிறது. இதை பயன்படுத்தி உங்கள் போட்டோ மட்டுமல்லாது பல புதிய டிசைன்களையும் செய்ய முடியும்.

இதில் பலவிதமான டூல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது அதை நீங்கள் முதலில் கையாள தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அவை ஒவ்வொன்றும் எதற்க்காக பயன்படுகிறது என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். இதை எல்லாம் நீங்கள் நன்கு அறிந்து கொண்டால் Photoshop செயலியை நீங்கள் திறம்பட கையாளலாம்.

டிஜிட்டல் பெயின்டிங் செயல்முறை

முதலில் உங்க கணினியில் Photoshop செயலியை பதிவிரக்கம் செய்து நிறுவி கொள்ளுங்கள். அதற்க்கு பின்பு New Document என்பதை அழுத்துங்கள். இப்பொழுது பலவிதமான வடிவமைப்புகள் உங்கள் முன் தோன்றும் அதில் A4 வடிவத்தை தேர்ந்தெடுங்கள். முக்கியமாக உங்கள் போட்டோவின் வடிவத்திற்கு ஏற்ப அதை தேர்ந்தெடுக்க வேண்டும். ( Landscap Or Portrait )

மேலுள்ள படத்தை பாருங்க இதில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் செய்யுங்கள். மேலும் அதிலுள்ள மற்ற option களையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றி கொள்ளலாம்.இவை எல்லாம் செய்துவிட்டு Create பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது ஒரு புதிய Document உருவாகியிருக்கும் .

முக்கியமான விருப்பங்கள் 

Photoshop செயலியில் முக்கியமான பல விருப்பங்கள் உள்ளது (Options) இவை எல்லாவற்றையும் நீங்கள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அவற்றின் பயன்பாடுகளை தெரிந்துகொண்டால் தான் நீங்கள் எந்தவொரு போட்டோவையும் எடிட் மற்றும் ஸ்பெசல் எபெக்ட்டுகளை செய்யவும் முடியும். இப்பொழுது டிஜிட்டல் பெயிண்டிங்கு தேவையான விருப்பங்களை மட்டும் பார்ப்போம்.

  • Layers (Short cut Press Ctrl+N)
  • Adjustment Layers
  • Brush Tool (Short cut Press B)
  • Quick Selection Tool (Short cut Press W)
  • Type Tool (Short cut Press T)

நீங்கள் எந்தவொரு போட்டோ அல்லது எபெக்ட்டுகளை சேர்த்துக்கொள்ளும் பொது அது ஒவ்வொரு தனி Layer ஆகவே காட்டப்படும் நீங்கள் தனித்தனி Layer களை எடிட் செய்துகொள்ளலாம் ஆனால் அது அடுத்த Layer ல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதுதான் உங்கள் மொபைல் செயலிக்கும் இத்ற்கும் உள்ள வேறுபாடு.

மேலும் வாசிக்க:  Photoshopல் Banner உருவாக்குவது எப்படி ? முழு விளக்கம்

முதலில் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போட்டோவை திறக்க வேண்டும் அதற்க்கு உங்கள் கீ போர்டில் Ctrl+O என்பதை அழுத்துங்கள். பிறகு போட்டோவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் ஆர்ட் போர்டில்  போட்டோ  மற்றும் Layer Create ஆகி இருக்கும்.

அந்த Layer ஐ செலக்ட் செய்து ஒரு காபி எடுத்துக்கொள்ளுங்கள் எதற்காக என்றால் நாம் எதாவது தவறாக எடிட் செய்தலும் கூட ஒரு Backup ஆகா இதை வைத்துக்கொள்ளலாம். இதற்கான குறுக்குவழி Ctrl+J  தற்போது Quick Selection Tool (W) ஐ பயன்படுத்தி நாம் கோப்பி செய்த layer ல் உள்ள person ஐ மட்டும் செலக்ட் செய்ய வேண்டும். (ஏதாவது சந்தேகம் உங்களுக்கு இருப்பின் மேலுள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்). 

இப்பொழுது மீண்டும் Ctrl + J ஐ அழுத்துங்கள் அவ்வாறு செய்த பின் உங்கள் போட்டோவில் இருக்கும் object அதாவது Person மட்டும் இன்னொரு தனி Layer ஆக உருவாகியிருக்கும். அதை தற்போது செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

தற்போது Solid Fill என்ற Option ஐ பயன்படுத்தி நீங்கள் விருப்பப்பட்ட கலரை Background ஆக கொடுக்கலாம். இதற்க்கு பின் தான் முழு எடிட்டிங்ம் உள்ளது. Smudge டூல் என்பதை பயன்படுத்தி ஸ்மூத் செய்ய வேண்டும்.

மேலுள்ள படத்தை பாருங்கள் அதில் குறிப்பிட்டது போல் தேவையா Brush ஐ பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்களிடம் பெயிண்ட் செய்வதற்கான brush இல்லை என்றால் Dafonts என்ற தளத்திற்கு சென்று Digital Painting Brush என்பதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அதை பயன்படுத்தி Opacity யில் ஒருசில மாற்றத்தை ஏற்படுத்தி உங்களுக்கு தேவையான அளவு smooth செய்து கொள்ளுங்கள்

முக்கியமாக நீங்க Quick Selection Tool பயன்படுத்தி இமேஜ் ஐ கட் செய்யும் பொது போட்டோவை உள் பக்கமாக சரியாக பொருத்தி கொள்ளுங்கள். ஏன் என்றால் அப்பொழுது தான் உங்களுக்கு இமேஜ் ன் வெளிப்பக்கமாக smudge செய்து effect கொண்டுவரமுடியும். அனைத்து எடிட்டிங் வேலைகளையும் செய்த பிறகு  File -Save As என்பதை அழுத்தி Save செய்துகொள்ளுங்கள். இதுபோல பயனுள்ள நல்ல Tutorial களை தெரிந்துகொள்ள நம்ம techknowtamil இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

By Admin

Leave a Reply

Your email address will not be published.