What is Javascript? Javascript என்றால் என்ன?

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Javascript

Javascript அறிமுகம் :

ஒரு சிறந்த website ஐ உருவாக்க HTML , CSS மற்றும் Javascript ஆனது தேவைப்படும். Java script என்பது ஒரு எளிய, ஆப்ஜெக்ட் சம்பந்தமான ஒரு மொழி ஆகும். இது website காண ஸ்கிரிப்டிங் language என அழைக்கப்படுகிறது. இந்த java script ஆனது interaction காக பயன்படுகிறது. வெப்சைட் ஆனது உருவாகும்போது HTML மற்றும் CSS ஆனது டிசைன்க்கு மட்டுமே பயன்படுகிறது. இது user உடன் இன்டராக்ட் செய்யாது. ஆனால் javascript பயன்படுத்தினால் இன்டராக்ட் ஆனது நடைபெறும். இது lightweight programming language ஆகும்.

இதனால் வெப்சைட் ஆனது வேகமாக இருக்கும். இது வெப்சைட் இல் டைனமிக் இன்டராக்ட்டிவ்க்காக பயன்படுத்தப்படும். இதில் டைனமிக் இன்டராக்ட்டிவ் என்பது நீங்கள் ஒரு பட்டன் ஐ கிளிக் செய்யும்போது அடுத்து என்ன நிகழ்வு நிகழவேண்டுமோ அதனை சரியாக செய்ய இந்த javascript ஆனது பயன்படுகிறது. Java மற்றும் Javascript ஆனது வெவேறு விதமான தளங்கள்.

Javascript ன் அம்சங்கள்:

Browsers Have Java script extension :

browser-extension-using-JavaScript

இந்த javascript  ஆனது எல்லா browser களிலும் உதாரணமாக Google Chrome , Microsoft Edge போன்ற பெரிய தளங்களில் இதனை பயன்படுத்த முடியும். இதில் C ன் structure மற்றும் syntax ஆகியவை ஆனது பயன்படுகிறது. உங்களுக்கு C ஆனது தெரிந்தால் இந்த Java script ஆனது எளிதாக இருக்கும். இந்த java script  இல் classes of inheritance ஐ விட  prototype ஆனது பெரிதும் பயன்படுகிறது. இதற்கு classes of inheritance என்றால் என்ன மற்றும் prototype என்றால் என்ன என்று இப்பொழுது பார்ப்போம்.

* Classes of inheritance:

இதில் Class என்பது ஒரு குரூப் ஆகும். மற்றும் inheritance என்பது அதிலுள்ள Object ஆகும். எடுத்துக்காட்டாக Class A மற்றும் Class B எடுத்துக்கொள்ளலாம். இதில் இரண்டுமே object உல் அடங்கும். இதில் ஒரு class ஆனது மற்றொரு class உடன் inheritance ஆகும். இதனை Classes of  inheritance என்பார்கள்.

மேலும் வாசிக்க:  HTML என்றால் என்ன? விரிவாக்கம் தமிழில்...

* Prototype :

Prototype இல் Class ஆனது இருக்காது. நேரடியாக Object மூலம் இது இயங்கும். இந்த prototype இல் ஒரு object மற்றொரு object உடன் inheritance ஆகும்.

Case – Sensitive Language :

இந்த Java script ஆனது ஒரு case sensitive language ஆகும். இதில் case sensitive என்பது நீங்கள் coding ஆனது type  செய்யும்போது  அதில் Captital A கு பதிலாக Small a ஆனது போட்டால் அந்த Coding ஆனது work ஆகாது. இதுவே Case Sensitive ஆகும்.

Supportable in various operating system :

operating-system

இது எந்த Operating System இருந்தாலும் வேலை செய்யும். மற்றும் இது எந்த பிரௌசர்களிலும் ரன் செய்யலாம். நீங்கள் இதில் ரன் மற்றும் வெப்சைட் develop கூட செய்யலாம்.

Good Control to User :

Java script ஆனது user கு நல்ல control ஆனது கொடுக்கிறது. இது நல்ல control கொடுப்பதால்தான் உங்களுடைய website ஆனது மெம்மேலும் deveop செய்ய இது பயன்படுகிறது.

Javascript Basics :

  • Javascript ஆனது ஒரு scripting language ஆகும். அதனால் இதனை script.js என save செய்வார்கள்.
  • நீங்கள் ஒரு javascript கோடிங் ஆனது எழுதவேண்டும் என்றால் அதற்கான tag ஆனது…

         <script> …. </script> இந்த tag உல் எழுத வேண்டும்.

  • நீங்கள் already java script file ஆனது வைத்திருந்தால் அதனை head tag அல்லது body டேக் இல் போடலாம். அதற்கான tag இதோ…

<script src = “script.js(Your File)”></script>

இவ்வாறு எழுத வேண்டும்.

நீங்கள் Javascript ஆனது செய்து பார்க்க ஆசைப்பட்டால், w3schools இந்த இணையதளம் ஆனது உதவியாக இருக்கும்.

இந்த java script தொடக்கம் ஆனது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்குறேன். மென்மேலும் பல தகவல்களை பெற நம்ம techknowtamil ஐ பாருங்க. உங்கள் கேள்விகளை கமெண்ட் இல் போடுங்கள். விரைவில் பதிலளிக்கப்படும். மற்றொரு lesson இல் உங்களை சந்திக்குறேன்.

Leave a Reply